அவருக்கு நடிப்பே வராது.. பிரஷாந்த் மீது கோபத்தை கொட்டி தீர்த்த பிரபல நடிகர் - அப்படி என்ன நடந்தது தெரியுமா?
நடிகர் பிரஷாந்த் குறித்து அப்பாஸ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
பிரபல நடிகர்
தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் அப்போதைய காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தார், இவர் 1990 -ம் ஆண்டு வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் சமீப காலமாக திடீரென பட வாய்ப்புகளை இழந்து காணாமல் போனார். இதற்கு காரணம் பிரசாந்த்தின் மனைவி தான் என்று கூறப்படுகிறது.
நடிகர் பேட்டி
இந்நிலையில், பிரபல நடிகர் அப்பாஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "பிரசாந்தின் நடனம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தாலும் அவரது நடிப்பு பெரிதாக கவரவில்லை. பிரசாந்த் அப்பா ஏற்கனவே திரையுலகில் பிரபலமாக இருந்தார்.

அதனால் அவருக்கு சினிமாவில் நடிக்க எளிதாக வாய்ப்புகள் கிடைத்தது, தன்னைப் போல் கஷ்டப்பட்டு வரவில்லை" என்று கூறியுள்ளார். முன்னதாக ஜீன்ஸ் படத்தில் அப்பாஸ் தான் நடிப்பதாக இருந்தது, ஆனால் அவரது மேனேஜர் செய்த குளறுபடியால் தான் நடிகர் பிரஷாந்த் நடித்தார். அதனால் அவர் உச்சத்தை அடைந்தார், அந்த கோபத்தால் கூட இவர் இப்படி பேசி இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan