அப்பா வயது நடிகருக்கு மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்? தீயாய் பரவும் தகவல்!

Aishwarya Rajesh
By Sumathi Jun 20, 2024 09:30 AM GMT
Report

அப்பா வயது நடிகருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்(34). பின்னர் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக ஜெயித்தார்.

aishwarya rajesh

தொடர்ந்து, அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் அறிமுகமாகி அட்டகத்தி அமுதாவாக வெற்றி பெற்றார். காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக தனது மொத்த வித்தையையும் இறக்கினார்.

கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க ஆசைதான் - அமைச்சர் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க ஆசைதான் - அமைச்சர் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

மூவி அப்டேட்?

பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் டாப் நாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்தார். தற்போது கதைக்களத்தை கவனமாக தேர்வு செய்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

அப்பா வயது நடிகருக்கு மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்? தீயாய் பரவும் தகவல்! | Aishwarya Rajesh Paired With Venkathesh In Telugu

இந்நிலையில், அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில் வெங்கடேஷின் மனைவி ரோலுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை படக்குழு தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவர் தெலுங்கில் மிஸ் மேட்ச், World Famous Lover, டக் ஜெகதீஷ், ரிபப்ளிக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.