கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க ஆசைதான் - அமைச்சர் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
இலங்கை அமைச்சர் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக ஜெயித்தார். தொடர்ந்து, அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் அறிமுகமாகி அட்டகத்தி அமுதாவாக வெற்றி பெற்றார்.

காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக தனது மொத்த வித்தையையும் இறக்கினார். பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் டாப் நாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்தார். தற்போது கதைக்களத்தை கவனமாக தேர்வு செய்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
திருமணம்?
இந்நிலையில், இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், ம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர், பொங்கல் கொண்டாட்டம் நான் நினைத்ததுபோலவே சிறப்பாக இருந்தது.

அமைச்சர் என்று சொன்னவுடன் அவர் வயதான நபராக இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவருக்கு வயது ரொம்பவே குறைவு. அதுமட்டுமின்றி ரொம்ப அழகாக இருக்கிறார். முதன்முறையாக குறைந்த வயதில் ஒருவர் அமைச்சராகி இருக்கிறார். அமைச்சர் ஜீவன் பல நல்ல விஷயங்களை செய்துவருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
இது மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றும், தனக்கு திருமணம் செய்து குழந்தை பெத்துக்கனும் என்ற ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
You May Like This Video
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    