என்கூட அடுத்து எப்போ? ஓப்பனா கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் - தனுஷ் என்ன சொன்னார் தெரியுமா?
தனுஷ் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ள தகவல் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்சி தொகுப்பாளராக பின்னர் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக ஜெயித்த பிறகு அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின், அட்டகத்தி அமுதாவாக வெற்றி பெற்றார்.
காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக தனது மொத்த வித்தையையும் இறக்கினார். பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் டாப் நாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.
வட சென்னை 2?
தற்போது கதைக்களத்தை கவனமாக தேர்வு செய்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில் வட சென்னை படத்தில் நடித்த பின் பலமுறை தனுஷிடம் ‘வட சென்னை தவிர வேறு எந்த படத்திலும் என்னை நடிக்க வைக்கவில்லையே. நான் என்ன மோசமான நடிகையா?’ என கேட்டேன். அதற்கு தனுஷ்
‘கண்டிப்பாக இல்லை. உங்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை நான் மதிக்கிறேன். வட சென்னை படத்தில் அந்த கதாபாத்திரத்தில் உங்களை நடிக்க வைப்பதற்காக எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருந்தேன்’ என சொன்னார். வெற்றிமாறன் வட சென்னை 2 எடுப்பார். அதில், நான் இருப்பேன் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.