நானே கட்டிப்பிடினு சொன்னேன்; அவருக்கு அந்த வயசுல அவ்வளவு கூச்சம் - ஐஸ்வர்யா ராஜேஷ் பளீச்

Aishwarya Rajesh
By Sumathi Sep 21, 2023 06:27 AM GMT
Report

படப்பிடிப்பின் அனுபவத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தொலைக்காட்சி தொகுப்பாளராக பின்னர் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக ஜெயித்த பிறகு அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின், அட்டகத்தி அமுதாவாக வெற்றி பெற்றார்.

நானே கட்டிப்பிடினு சொன்னேன்; அவருக்கு அந்த வயசுல அவ்வளவு கூச்சம் - ஐஸ்வர்யா ராஜேஷ் பளீச் | Aishwarya Rajesh Kaakaa Muttai Movie Experience

காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக தனது மொத்த வித்தையையும் இறக்கினார். பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் டாப் நாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

காக்கா முட்டை

தற்போது கதைக்களத்தை கவனமாக தேர்வு செய்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில்,

நானே கட்டிப்பிடினு சொன்னேன்; அவருக்கு அந்த வயசுல அவ்வளவு கூச்சம் - ஐஸ்வர்யா ராஜேஷ் பளீச் | Aishwarya Rajesh Kaakaa Muttai Movie Experience

"காக்கா முட்டை படத்தின் எமோஷனல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது எனது இரண்டாவது மகனாக நடித்த இரண்டு பேரும் என்னை கட்டிப்பிடிக்க வேண்டும். ஆனால் எனக்கு இரண்டாவது மகனாக நடித்த பையன் என்னை கட்டிப்பிடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டான்.

ஏன் என்று கேட்டால் கூச்சமா இருக்கு என்றான். இந்த வயசுல கூச்சப்படுறதுக்கு என்னடா இருக்குனு சொல்லி சமாதானம் செய்தேன். அதன் பிறகுதான் அவன் என்னை கட்டிப்பிடித்தான்" எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.