பொண்ணுங்கன்னா தீட்டா; எந்த சாமி சொல்லுச்சு - பரபரப்பை கிளப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh Indian Actress Sabarimala
By Sumathi 1 வாரம் முன்

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தொலைக்காட்சி தொகுப்பாளராக பின்னர் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக ஜெயித்த பிறகு அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின், அட்டகத்தி அமுதாவாக வெற்றி பெற்றார்.

பொண்ணுங்கன்னா தீட்டா; எந்த சாமி சொல்லுச்சு - பரபரப்பை கிளப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh About Sabarimala

தடாலடியாக இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக தனது மொத்த வித்தையையும் இறக்கினார். பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் டாப் நாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்தார். தற்போது கதைக்களத்தை கவனமாக தேர்வு செய்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

எந்த கடவுள் சொல்லுச்சு

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பொண்ணுங்களுக்குனா தீட்டா..''எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை.

அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள். எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது. இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது. நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை.

இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது.ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் நிறைய இருக்கின்றது என்பது எனது கருத்து என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.