நான் சுவாசிப்பதே உனக்காக தான்.. ஐஸ்வர்யா ராய் போட்ட பதிவு!
நடிகை ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராய்
மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், இந்தியாவில் எத்தனை பேர் உலக அழகி பட்டம் வென்றாலும் அனைவர் மனதிலும் உலக அழகி என்றவுடன் முதலில் நியாபகத்துக்கு வருபவர் இவர் தான். இவர் மணிரத்னம் இயக்கிய இருவர் என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன், கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
வைரல் பதிவு
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "எனது அன்பு மகள் ஆராத்யா, உன்னை நான் எல்லையில்லாமல் நேசிக்கிறேன், என்றென்றும் நேசிக்கிறேன். என் வாழ்க்கையின் கட்டுக்கடங்கான அன்பு நீதான், உனக்காகவே நான் சுவாசம் செய்கிறேன்.
என் அன்பே, இனிய 12 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னை எப்போதும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும், நீ நீயாக இருப்பதற்கு நன்றி. உன் மீது எனக்கு மதிப்பில்லாத அன்பு, அதிகமான நேசம் இருக்கிறது.
நீதான் எனக்கு மிகச் சிறந்தவள்" என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர்களும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஆராத்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.