தனுஷுக்காக தனது முடிவை மாற்றினாரா ஐஸ்வர்யா? - வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய பட வேலைகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் மாறன் படம் வெளியான நிலையில் , ஐஸ்வர்யா இயக்கத்தில் 'முசாபிர்' எனும் மியூசிக் ஆல்பம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த அடுத்ததாக படம் இயக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் சிம்பு நடிப்பார் என வெளியான நிலையில் இது தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனுஷை கடுப்பேற்ற தான் ஐஸ்வர்யா இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்தனர்.
இதனிடையே சில தினங்களுக்கு முன் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸை சந்தித்த ஐஸ்வர்யா தனது அடுத்த படத்தில் அவருடன் இணையவுள்லது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil