ஐஸ்வர்யா 2வது காதல் திருமணம் - பிரபலத்திற்கு மருமகனாகும் இயக்குநர்!
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
ஐஸ்வர்யா பிரபு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரபு. சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு விக்ரம் என்கிற மகனும் ஐஸ்வர்யா என்கிற மகளும் உள்ளனர்.
விக்ரம் பிரபு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009ல் அவரின் உறவினர் குணால் என்பவருடன் திருமணம் நடந்தது.
திருமணம்
அதன்பின், அமெரிக்காவில் செட்டிலானவர், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை இவர் காதலித்து வந்த நிலையில், டிசம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருவரது குடும்பத்தினரும் திருமண ஏற்பாட்டில் மும்முரமாக உள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து, அஜித்தை வைத்து அடுத்த படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
You May Like This Video