2வது திருமணம்; மகள் மீது கோபத்தில் ரஜினி - சரியான பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா!

Sumathi
in பிரபலங்கள்Report this article
ரஜினி, மகள் ஐஸ்வர்யா மீது கோபத்தில் உள்ளதாக பரவிய தகவலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் தாய் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர்.
தொடர்ந்து ஐஸ்வர்யா 2வது திருமணம் செய்யப்போவதாக செய்திகள் பரவிய வண்னம் இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து போன ரஜினி, மன அமைதிக்காக தான் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
தக்க பதிலடி
தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா, தன் தந்தை ரஜினியிடம் போய் தான் உதவி இயக்குனர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
இதனால் டென்ஷன் ஆன ரஜினிகாந்த் மகளை திட்டிவிட்டு மாலத்தீவுக்கு கிளம்பி சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐஸ்வர்யா, அப்பாவின் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் முடிந்ததும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
You May Like This Video