2வது திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்த ஐஸ்வர்யா - கடுப்பான ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த், மாலத்தீவுக்கு திடீரென சென்றிருப்பதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் தாய் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர்.
தொடர்ந்து ஐஸ்வர்யா 2வது திருமணம் செய்யப்போவதாக செய்திகள் பரவிய வண்னம் இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து போன ரஜினி, மன அமைதிக்காக தான் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
2வது திருமணம்
தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா, தன் தந்தை ரஜினியிடம் போய் தான் உதவி இயக்குனர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனால் டென்ஷன் ஆன ரஜினிகாந்த் மகளை திட்டிவிட்டு மாலத்தீவுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.
மேலும், தனுஷ் விவாகரத்து பெறும் ஐடியாவில் இல்லை. அவர் அந்த எண்ணத்தில் இருந்திருந்தால் உன் மகன்கள் மீது இவ்வளவு பாசமாக இருக்க மாட்டார். அவர் மகன்கள் மீது காட்டும் பாசம் உன்மீதும் நேசமாக மாறும், நீ பொறுமையா இரு,
இதுபோன்று தவறான முடிவெல்லாம் எடுக்காதே என ரஜினி தன் மகளுக்கு அட்வைஸ் வழங்கியதாகவும் கொளுத்தி போட்டுள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
