தனுஷ்க்கு முன்னதாக ஐஸ்வர்யா 2 பேரை காதலித்தாரா? பகீர் கிளப்பிய பிரபலம்

Dhanush Aishwarya Rajinikanth Bayilvan Ranganathan
By Sumathi Apr 11, 2023 05:30 PM GMT
Report

தனுஷுக்கு முன்பாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டு பேரை காதலித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் தாய் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர்.

தனுஷ்க்கு முன்னதாக ஐஸ்வர்யா 2 பேரை காதலித்தாரா? பகீர் கிளப்பிய பிரபலம் | Aishwarya Rajinikanth Love Two Men Before Dhanush

சமீபத்தில் நடிகர் தனுஷ் 150 கோடி ரூபாய் செலவில் சென்னை போயஸ் கார்டனில் மாமனார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு எதிரிலேயே பிரம்மாண்டமாக வீடு கட்டி குடி புகுந்தார். ஆனால் அதில் மனைவி குடும்பத்தில் யாரும் கலந்துக்கொள்ளவில்லை.

இரண்டு காதல்?

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், "தனுஷ் - ஐஸ்வர்யா காதல் விவகாரம் பூதாகரமானபோது பத்திரிகையாளர்களை அழைத்தார் ரஜினி. அப்போது என்ன விசேஷம் என்று கேட்டேன். அதற்கு அவர் உங்களுக்கு தெரியாததா?

தனுஷ்க்கு முன்னதாக ஐஸ்வர்யா 2 பேரை காதலித்தாரா? பகீர் கிளப்பிய பிரபலம் | Aishwarya Rajinikanth Love Two Men Before Dhanush

தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் என்று பத்திரிகையாளர்கள்தான் எழுதினீர்கள். எனவே கஸ்தூரி ராஜாவிடம் பெண் எடுத்துக்கொள்ள சம்மதமா எனக்கேட்டேன். அவரும் ஒத்துக்கொண்டார். எனவே நீங்கள் எழுதியதை உண்மையாக்கிவிட்டேன் என கூறினார். தனுஷுக்கு முன்னதாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிம்புவை காதலித்தார்.

அதன் பிறகு அவர் பிரபல தொழிலதிபரின் மகனை காதலித்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். எதற்காக இப்போது அந்தக் குப்பையை கிளற வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு பிறகும் தனுஷும் ஐஸ்வர்யாவும் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள் என தெரிவித்துள்ளார்.