மலக்குடலில் 1 கிலோ தங்கம் கடத்திய விமான பணிப்பெண் - ஆடிப்போன அதிகாரிகள்!
மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கம் கடத்தல்
ஓமன், மஸ்கட்டிலிருந்து, கேரளாவின் கண்ணூருக்கு செல்லும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், விமான பணியாளரான கொல்கத்தாவைச் சேர்ந்த சுரபி கதுன் என்ற பெண், அவரின் மலக்குடலில் 960 கிராம் அளவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அயன் பட ஸ்டைலில் தலையில் ’விக்’ வைத்து தங்கம் கடத்தல் - தலையில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் வீடியோ வைரல்
சிக்கிய பணிப்பெண்
தொடர்ந்து, அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தப் பெண் ஏற்கனவே பலமுறை இதுபோன்று தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தியது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கொச்சி விமான நிலையத்தில் தோஹாவில் இருந்து வந்த பயணி ஒருவரை சோதித்த போது அவரிடம் 560 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.