அயன் பட ஸ்டைலில் தலையில் ’விக்’ வைத்து தங்கம் கடத்தல் - தலையில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் வீடியோ வைரல்

Gold smuggling
By Swetha Subash Apr 21, 2022 08:46 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

தலையில் விக் வைத்து தங்கம் கடத்த முயன்ற நபர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தலையின் நடுபகுதியில் மட்டும் வட்ட வடிவில் முடியை வெட்டிவிட்டு, தங்கத்தை பேஸ்ட் போன்ற வடிவத்துக்கு மாற்றி அதை தலையில் வைத்து, அதன்மீது விக் வைத்து தங்கம் கடத்த முயன்றுள்ளார் அபுதாபியில் இருந்து தலைநகர் டெல்லி வந்தடைந்த பயணி ஒருவர்.

இந்த தங்கத்தின் எடை 630.45 கிராம் என்றும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.30.55 லட்சம் மதிப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணியின் தனிப்பட்ட மற்றும் அவர் கொண்டு வந்த உடைமைகளை விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது டேப்பால் சுற்றப்பட்ட மூன்று பைகளில் சுமார் 686 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணியிடன் இருந்த இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.