துபாயிலிருந்து ரூ.63.2 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தல் - வசமாக சிக்கிய பயணி!

tamilnadu-samugam
By Nandhini Jun 10, 2021 10:17 AM GMT
Report

துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.63.2 லட்சம் மதிப்புடைய ஒன்றே கால் கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடத்தி வந்த கன்னியாகுமரி பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

துபாயிலிருந்து ஃபிளை சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த பயணிகளில் ஒருவர் தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் கிடையாது என்று சொல்லிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றாா். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவா் மேல் சந்தேகம் வந்தது.

இதனையடுத்து, அந்த இளைஞரை மீண்டும் சுங்கதுறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவா் கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த சாமீனோ ஜேசையா (26). இவா் கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

துபாயிலிருந்து ரூ.63.2 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தல் - வசமாக சிக்கிய பயணி! | Tamilnadu Samugam

தற்போது விடுமுறையில் சொந்த ஊா் திரும்பியுள்ளார். அவருடைய உடமைகளை முழுமையாக அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அவா் அணிந்திருந்த ஜீன்ஸ்பேண்ட் பெல்ட்டை சோதனை செய்ததில், பெல்ட் அடியில் மறைத்து வைத்திருந்த தங்க பேஸ்ட் அடங்கிய பிளாஸ்டிக் பவுச்கள் சோதனையில் கைப்பற்றினர். மொத்தம் ஒரு கிலோ 250 கிராம் தங்க பேஸ்ட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் சா்வதேச மதிப்பு ரூ.63.2 லட்சமாகும். இதனையடுத்து, சுங்கத்துறையினா் பயணி சாமீனோ ஜேசையாவை கைது, தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.