நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம் - பயணிகளின் மோசமான நிலை!

Spain Brazil Flight
By Sumathi Jul 02, 2024 07:03 AM GMT
Report

 விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் பயணிகள் காயமடைந்துள்ளனர்.

குலுங்கிய விமானம்

ஐரோப்பியா நாடான ஸ்பெயின் மாட்ரிட் நகரில் இருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு ஏர் யூரோப்பா விமானம் ஒன்று சென்றது. இதில் இந்த விமானத்தில் 325 பேர் பயணித்துள்ளனர்.

air europe

திடீரென விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது.

திடீரென நடுவானில் குலுங்கிய விமானம்; காற்றில் மிதந்த பணிப்பெண் - திக் திக்!

திடீரென நடுவானில் குலுங்கிய விமானம்; காற்றில் மிதந்த பணிப்பெண் - திக் திக்!

பயணிகள் நிலை?

காயமடைந்த பயணிகளில் 30 பேருக்கு விமான நிலையத்தில் வேண்டிய மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும், 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பயணிகள் சிலர் பகிர்ந்துள்ளனர்.

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம் - பயணிகளின் மோசமான நிலை! | Air Europa Flight Emergency Landing In Brazil

அதில் பயணி ஒருவர் தலைக்கு மேல் இருக்கும் கம்பார்ட்மெண்ட் பகுதியில் சிக்கி இருந்தார். இதனை ஏர் யூரோப்பா மற்றும் உள்ளவர் விமான நிலைய தரப்பும் உறுதி செய்துள்ளது. தற்போது இதுகுறித்த விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.