நடுவானில் நடந்த விபரீதம்; குலுங்கிய விமானம் - நரகத்தை பார்த்த பயணிகள் - ஒருவர் பலி!
நடுவானில் திடீரென விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குலுங்கிய விமானம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட மிகவும் மோசமான வானிலை காரணமாக விமானம் தடுமாறி இருக்கிறது. திடீரென பயங்கரமாக குலுங்க தொடங்கியுள்ளது.
இதில் கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதால் நடுவானில் நடந்த இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். இது குறித்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், `சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ 321 போயிங் 777-300ER, லண்டன் ஹீத்ரோவிலிருந்து சிங்கப்பூருக்கு மே 20-ம் தேதி இயக்கப்பட்டது.
ஒருவர் பலி
வழியில் விமானம் கடுமையாகக் குலுங்கியது. பின்னர், பாங்காக்குக்குத் திருப்பிவிடப்பட்ட விமானம் இன்று மாலை 03:45 மணியளவில் தரையிறங்கியது. விமானத்தில் மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார். அதோடு சிலர் காயமடைந்தனர்.
இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.விமானத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும், பணியாளர்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதே எங்கள் முன்னுரிமை. தாய்லாந்திலுள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்குகிறோம்.
அதோடு, தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்குக்கு அனுப்புகிறோம்' என குறிப்பிட்டிருந்தது. இதுபோன்ற சில நேரங்களில் விமானம் திடீரென ஏற்படும் கால மாற்றங்கள் காரணமாக இத்தகைய நிகழ்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், விமானம் இதுபோன்று சிலசமயம் எந்த நேரத்திலும் குலுங்கக்கூடும் என்பதால் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.