திடீரென நடுவானில் குலுங்கிய விமானம்; காற்றில் மிதந்த பணிப்பெண் - திக் திக்!
திடீரென விமானம் குலுங்கியதால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
குலுங்கிய விமானம்
அமெரிக்கா, அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் எனும் தனியார் விமானம் வட கரோலினா மாநிலத்திலிருந்து புறப்பட்டு, புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.
விமானத்தில் 179 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்தனர். அப்போது வழியில், வலிமையான காற்றால் திடீர் ஏற்ற இறக்கத்திற்கு உள்ளானது. அதில், நிலை தடுமாறியதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். ஆனால், இந்த விமானம் எந்த தடையும் என்று ஓடுதளத்தில் தரை இறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் காயம்
காயம் அடைந்தவர்களுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவ பணியாளர்கள் விரைவாகச் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, 2 பயணிகள் மற்றும் பணிப்பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த அனுபவம் குறித்து பேசிய பயணி லிசா ஸ்ப்ரிக்ஸ், இந்த அனுபவம் மிகவும் மோசமானதாக இருந்தது. எங்கள் அருகில் இருந்த பணிப்பெண் ஒருவர் விமானத்தின் குலுக்கத்தால் காற்றில் பறந்தார். அரை வினாடிக்குப் பின் தான் தரையில் விழுந்தார். அதில் அவருக்கு மிகப்பெரிய காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.