நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம் - அலறி கூச்சல்போட்ட விமானிகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video
By Nandhini May 02, 2022 11:17 AM GMT
Report

நேற்று இரவு மும்பையிலிருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகருக்கு 'ஸ்பைஸ் ஜெட் போயிங் 737' விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது.

அப்போது, துர்காபூர் அருகே வந்ததும் விமானம் தரையிறங்குவதற்கு ஏதுவாக தாழ்வாக பறக்கத் தொடங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது.

விமானம் குலுங்கியதில் பயணிகள் பயத்தில் அலறி கத்தி கூச்சல்போட்டனர். விமானம் குலுங்கியதில் சில பயணிகள் இருக்கைகளிலிருந்து கீழே விழுந்தனர்.

இச்சம்பவத்தில் 12 பயணிகள் மற்றும் 3 விமானப் பணியாளர்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். சிறிது நேரத்திலேயே விமானம் துர்காபூரில் பத்திரமாக தரையிறங்கிவிட்டது.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.