புறப்பட்டதும் விமானத்தில் பற்றிய தீ; அலறிய 389 பயணிகள் - பகீர் கிளப்பும் Video!

Viral Video Canada Flight World
By Jiyath Jun 09, 2024 10:18 AM GMT
Report

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தீப்பொறிகள் 

கனடாவின் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்திலிருந்து, ஏர் கனடாவின் போயிங் 777 விமானம் பாரீஸ் நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 389 பயணிகள் மற்றும் 13 பணியாளர்கள் இருந்தனர்.

புறப்பட்டதும் விமானத்தில் பற்றிய தீ; அலறிய 389 பயணிகள் - பகீர் கிளப்பும் Video! | Air Canada Plane Catches Fire After Takeoff

விமானம் ஓடுபாதையில் மேலேறிக் கொண்டிருந்தபோது வலது இன்ஜினிலிருந்து தீப்பொறிகள் வெளியாவதை ​​விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்து. உடனடியாக இதுகுறித்து விமானிகளை எச்சரித்ததை அடுத்து, டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

மாயமான பெண்; 16 அடி மலைப்பாம்பின் வயிற்றை கிழித்த கிராம மக்கள் - காத்திருந்த அதிர்ச்சி!

மாயமான பெண்; 16 அடி மலைப்பாம்பின் வயிற்றை கிழித்த கிராம மக்கள் - காத்திருந்த அதிர்ச்சி!

என்ன நடந்தது? 

இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. இதுகுறித்து ஏர் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்த விபத்து விமானத்தின் கம்ப்ரசர் தீப்பிடித்ததால் நடந்திருக்கிறது.

புறப்பட்டதும் விமானத்தில் பற்றிய தீ; அலறிய 389 பயணிகள் - பகீர் கிளப்பும் Video! | Air Canada Plane Catches Fire After Takeoff

அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பே விமானம் தரையிறக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் உடனே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், பயணிகள் மற்றொரு விமானத்தில் குறிப்பிட்ட பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.