விமானத்தில், குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' வெறிச்செயல் - நஷ்ட ஈடாக ரூ.3 கோடி!

United States of America World
By Jiyath Dec 03, 2023 06:21 AM GMT
Report

விமானத்தில் நடந்த தாக்குதலில், மைக் டைசனிடம் குத்து வாங்கிய நபர் ரூ.3 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். 

மைக் டைசன்

பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரரான 'மைக் டைசன்' கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவரின் பின்னர் இருக்கையில் அமர்ந்திருந்த மெல்வின் டவுன்சென்ட் என்ற பயணி, மைக் டைசனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்துள்ளார்.

விமானத்தில், குத்துச்சண்டை வீரர்

மேலும், டைசனின் காதுக்கு அருகே சென்ற அந்த பயணி தொடர்ந்து பேசிக்கொண்டே நச்சரித்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த டைசன், அந்த பயணியை கடுமையாக தாக்கியுள்ளார். இருவரும் மாறி மாறி குத்திக்கொண்டதில் அந்த பயணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ISRO: ஆதித்யா எல்-1 விண்கலம் என்ன ஆனது..? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!

ISRO: ஆதித்யா எல்-1 விண்கலம் என்ன ஆனது..? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!

நஷ்ட ஈடு

இதனைப் பார்த்த பலரும், டைசன் ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டதாக விமர்சித்தனர். ஆனால் அந்த பயணி கோபத்தை தூண்டும் வகையில் பேசியதாக டைசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில், குத்துச்சண்டை வீரர்

இந்த சமத்துவம் நடந்து ஒரு வருடத்தை தாண்டிய நிலையில், மைக் டைசனிடம் குத்து வாங்கிய அந்த பயணி, டைசன் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுக்கு அதிக மருத்துவச் செலவுகள் செய்ததாக 3.50 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.3 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், டைசனின் வழக்கறிஞர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், நஷ்ட ஈடு தொடர்பான உடன்பாடு எட்டப்படாவிட்டால் வழக்கு தொடரப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். ஆனால் பணம் எதுவும் கொடுக்க முடியாது என டைசனின் வழக்கறிஞர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.