மாயமான பெண்; 16 அடி மலைப்பாம்பின் வயிற்றை கிழித்த கிராம மக்கள் - காத்திருந்த அதிர்ச்சி!
பெண் ஒருவரை 16 அடி மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாம்பு
இந்தோனேசியாவின் தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிதா (45). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில், கிராமத்தினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அப்போது 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அந்த பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது, உள்ளே அந்த பெண்ணின் ஆடைகளுடன் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் இருந்துள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
மலைப்பாம்புகளால் மக்கள் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் இந்தோனேசியாவில் தொடர்கதையாகி வருகிறது. அந்நாட்டின் தினாகியா மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 8 அடி பைத்தானால் கடந்த வருடம் விழுங்கப்பட்டார்.
அதேபோல் 2018-ம் ஆண்டு சுலானீஸ் மாகாணத்தில் 54 வயது பெண் ஒருவர் 7 ஆடி பைத்தானின் வயிற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவங்களால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.