அதிமுக பொதுக்குழு விவகாரம் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு..!
அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடும் பூதாகரமாகியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கட்சியை கைபற்றும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஓ.பி.எஸ் அணியினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.கடந்து 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் ஓ.பி.எஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். மேலும் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டுள்ளதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணைப்படி 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மனுவை விரைவில் விசாரிக்க உள்ளது.

Optical illusion: கண்களை சோதித்து பாருங்கள்...இதில் இருக்கும் 3 வித்தியாச இலக்கங்கள் எங்கே? Manithan
