AI மூலம் மனைவி கிடைக்குதாம்.. கல்யாணத்திற்கு மணப்பெண் கிடைக்காத நிலையில் இதை கவனிச்சீங்களா!
மனைவியை ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக கண்டுபிடித்ததாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ChatGPT
ரஷ்யாவைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் ஜாதன் (23). சாப்ட்வேர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ChatGPT மற்றும் பிற AI போட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் 1 வருடத்தில் 5,000 பெண்களைச் சந்தித்துள்ளார்.
மேலும், "AI- Soulmate" ஆன கரினா இம்ரானோவ்னா என்ற பெண்ணை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரே கூறுகையில், இந்த ஏஐ சாட்பாட்-யில் நான் எப்படி தொடர்புகொள்கிறேன் என்பது பற்றிய தகவலை சாட்ஜிபிடிக்கு வழங்கினேன்.
இந்த புரோகிராம் என்னை அறியாததால் ஆரம்பத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. என்னைப் போன்றே பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அளவுக்கு நான் இந்த ஏஐ பயிற்றுவித்தேன். முதல் கட்டமாக ஏஐ போட் மோசமான பொருத்தங்களை நீக்கியது. அதன்பின், டேட்டிங் சைட்டில் பேச்சுக்களை துவங்கியது.
AI- Soulmate
சந்திக்கும் நாள் முடிவு செய்வதில் இருந்து, பிடித்தமான பெண்ணிடம் புரொபஸ் செய்யும் வரை உதவியது. எந்த பெண்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்பதைக் காட்டும் சில பில்டர்களையும் அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதன்பின், நிஜ வாழ்க்கையில் கரினா என்ற பெண்ணை சந்தித்து கடிதப் பரிமாற்றத்தைத் தொடர ஏஐ தளத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
அந்த பெண்ணுடன் எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நியூரல் நெட்வொர்க் தெரிவித்துள்ளது. இறுதியில், கரினாவிடம் விருப்பத்தை தெரிவிக்குமாறு சாட்ஜிபிடியிடம் பரிந்துரைத்து, உறவு சீரானதாகவும் வலுவாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நேரில் சென்று பார்த்து நல்ல மணப்பெண் கிடைப்பதெல்லாம் சிரமமாகிவிட்ட நிலையில், சாட்ஜிபிடி போன்ற டேட்டிங் தளங்கள் மூலம் மனைவி கிடைப்பது எளிதாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.