ரியல் காதலன் வேண்டாம் ரீல் காதலன் போதும்; பெண்கள் முடிவால் திணறும் நாடு - ஆண்களின் நிலை?
ஏஐ தொழில்நுட்பத்தால் உருவான காதலனுடன் பெண்கள் பழகி வருகின்றனர்.
ஏஐ தொழில்நுட்பம்
தொழில் நுட்பத்தில் அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான சீனா தற்போது அதே தொழில்நுட்பத்தால் வீழ்ச்சி அடைய போவதாக வல்லுநர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.
ஹாங்காய் நகரைச் சேர்ந்த மினிமேக்ஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவணம் ஏஐ முலம் “க்ளோ” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி பெண்கள் எதிர்ப்பார்க்கும் காதல் வாழ்கையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
காதலில் பெண்கள்
இலவசமாகவே கிடைக்கிறது. சில கண்டெண்டுகளை பயன்படுத்த மட்டும் கட்டணம் செலுத்த வேண்டுமாம். இந்த ஏஐ காதலன் பெண்களிடம் எப்படி பேசவேண்டும் என்று தெரிந்தவன், மென்மையானவன், பெண்களின் உணர்ச்சியை புரிந்துக்கொண்டு மிகவும் அன்பாக பேசுபவன் என பயன்படுத்தும் பெண்கள் பலர் கூறுகின்றனர்.
தொடங்கிய குறுகிய காலத்தில் இந்த செயலி பெரிய வரவேற்பை பெற்று ட்ரெண்டாகி வருகிறது. ஏற்கனவே அங்கு மக்கள் தொகை மெல்ல சரிந்துக்கொண்டே வருகின்றது.
இந்நிலையில், இதனை பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் மக்கள் தொகை விரையில் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் சீனாவின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் என்கின்றனர்.