உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்..தெருநாய்களால் மீட்கப்பட்ட சம்பவம்! நடந்தது என்ன?
உத்தர பிரதேசத்தில் நிலத்தகராறு காரணமாக 24 வயதான இளைஞர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வசித்து வருபவர் ஹேப்பி என்ற ரூப் கிஷோர் (24). கடந்த ஜூலை 18-ம் தேதி ஆக்ராவின் அர்டோனி பகுதியில் உள்ள அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் ஆகியோருக்கு இடையே நிலத்தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் 4 பேரும் சேர்ந்து ரூப் கிஷோரை தாக்கிய போது சுயநினைவைஇழந்துள்ளார் .இதனையடுத்து பண்ணையில் புதைத்து உள்ளனர். இந்த நிலையில், தான் அவர் புதைக்கப்பட்ட இடத்தில்தெருநாய்கள் கூட்டம் தோண்டத் தொடங்கியது.
நிலத்தகராறு
அப்போது ரூப் கிஷோரின் சதையை நாய்கள் கடித்ததில் அவருக்கு சுயநினைவு திரும்பி வெளியே வந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து ரூப் கிஷோரை மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஆக்ரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் பொருட்டு தலைமறைவாக இருக்கும் 4 பேரையும் பிடிக்க முயன்று வருகின்றனர்.
நிலத்தகராறு காரணமாக 24 வயதான இளைஞர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.