பொதுத்தேர்வில் 600'க்கு 572 !! ஆனால் இது நடக்கல - தற்கொலை செய்து கொண்ட மாணவி !!
பொதுத்தேர்வில் முதல் இடம் பிடிக்காத காரணத்தால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
572 மதிப்பெண்
உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஃபிரோஸ்பூரில் உள்ள கிருஷ்ணா இன்டர் கல்லூரியில் சாக்ஷி சிங் என்ற மாணவி படித்து வந்துள்ளார்.
பாண்டேபூர் கிராமத்தில் வசிக்கும் யோகேந்திர சிங் என்பவரின் மகளான இவர், இந்த வருடம் 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். வெளியான தேர்வு முடிவுகளில் அவர், 600'க்கு 572 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார்.
3 மதிப்பெண்கள்
குடும்பம், உற்றார் உறவினர் என பலரும் ஆனந்தத்தில் இருந்த நிலையில் தான், முட்டாள்தனமான முடிவை மாணவி சாக்ஷி எடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு சாக்ஷி, வீட்டின் பக்கத்து மாட்டுத் தொழுவத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
காலை விலங்குகள் கொட்டகைக்கு குடும்பத்தினர் சென்றபோது, பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றார்கள்.
பள்ளியில் தான் டாப்பர் ஆகவில்லை என்ற ஏக்கம் மாணவியிடம் இருந்துள்ளது. பள்ளியில் தன்னை விட 3 மதிப்பெண்கள் அதிக பெற்ற மாணவி டாப்பர் ஆனது, பள்ளியில் மாணவியை அழைத்து கௌரவித்தது போன்ற சம்பவங்கள் சாக்ஷிக்கு வருத்தமளித்துள்ளதாக கூறப்படுகிறது.