'மனிதநேயம்' என்ற பெயர்ப்பலகை வேண்டும் - உ.பி அரசை விமர்சித்த சோனு சூட்!
மனிதநேயம் என்ற பெயர்ப்பலகை வேண்டும் என உ.பி அரசை சோனு சூட் விமர்சித்துள்ளார்.
சோனு சூட்
உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அதாவது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அரசு இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
மனிதநேயம்
பாஜக ரசின் இந்த உத்தர இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது கருத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை தான் இருக்க வேண்டும். அது மனிதநேயம்" என்று தெரிவித்துள்ளார்.
There should be only one name plate on every shop : “HUMANITY” ??
— sonu sood (@SonuSood) July 19, 2024