போராட்டத்தில் ஈடுபட்டால் ராணுவத்தில் இடம் இல்லை : பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

Armed Forces India
By Sumathi Jun 19, 2022 10:50 AM GMT
Report

அக்னிபத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முடியாது என்று ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி தெரிவித்துள்ளார்.

அக்னிபத் 

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,

போராட்டத்தில் ஈடுபட்டால் ராணுவத்தில் இடம் இல்லை : பாதுகாப்புத்துறை எச்சரிக்கை! | Agnipath Says Lt Anil Puri Secy Dept Of Military

ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி இன்று பிற்பகல் 2 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

வன்முறை

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை. அக்னிபத் மூலம் சேருபவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டால் ராணுவத்தில் இடம் இல்லை : பாதுகாப்புத்துறை எச்சரிக்கை! | Agnipath Says Lt Anil Puri Secy Dept Of Military

ராணுவத்தில் சேர ஒழுக்கம் மிக அவசியம். தீ வைப்பு போன்ற நாசவேலைகளில் ஈடுபடுவோருக்கு இடமில்லை. வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவோர் ராணுவத்தில் சேர முடியாது.

 திரும்பப் பெறப்படாது

ஒவ்வொரு விண்ணப்பமும் காவல்துறை மூலம் சரிபார்க்கப்படும். நாசவேலைகளில் ஏதும் ஈடுபடவில்லை என காவல்துறை சான்று பெற்றுத் தந்தால்தான் ராணுவத்தில் சேர முடியும். அக்னிபத் திட்டத்தால்

ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் முப்படையில் சேர வாய்ப்பு உள்ளது. பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் பரிந்துரைகளின் பேரில் அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே அக்னிபத் திட்டம். அக்னிவீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.அக்னிவீரர்கள் உயிர் தியாகம் செய்தால்

ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்படாது என்றார். 

அக்னிபத் திட்டம் போன்ற சீர்திருத்தம் அவசியம் - நடிகை கங்கனாரனாவத்