அக்னிபத் படையில் சேர்ந்தால்தான் தேசப்பற்றா? : சீமான் கேள்வி

Seeman
By Irumporai Jun 19, 2022 07:27 AM GMT
Report

அக்னிபாத் படையில் சேர்ந்துதான் தேசபற்றை நிரூபிக்க வேண்டுமா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அக்னிபாத் விவகாரம் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது, மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன தமிழகத்திலும் சில இடங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

பிறப்பில் இருந்து இறப்பு வரை தீர்மானப்பது அரசு

இந்த நிலையில் அக்னிபத் படையில் சேர்ந்துதான் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்அரசியல் என்பது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாழ்வியல் இதனை நாம் கற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறினார்.

அக்னிபத் படையில் சேர்ந்தால்தான் தேசப்பற்றா? :  சீமான் கேள்வி | Eeman Questions Agnipath Scheme

மேலும் பிறப்பில் இருந்து இறப்பு வரை தீர்மானப்பது அரசு. அதனை தீர்மானிப்பது அரசியல். எனவும் டீ, டிபன் எல்லாம் பேச்சுவழக்கில் தமிழாக மாறிவிட்டது, ஆனால் நாம் தேநீர் சிற்றுண்டி என மாற்றமுடியும். நாக்கை கூட திருத்த முடியாமல் நாட்டை எப்படி திருத்துவது. என கேள்வி எழுப்பினார் .

அக்னிபாத்தில் சேர்ந்தால் தான் தேசபற்றா

மேலும், 5ஆயிரம் கோடி முதலீடு செய்து கட்சிகள் முதல் இரண்டாவது இடத்தில் உள்ளனர் , நான் ஒரு பைசா செலவு செய்யாமல் மூன்றாவது இடத்தில் உள்ளேன், நிச்சயம் தமிழகத்தில் மாற்றம் வரும் எற தெரிவித்தார்.

அக்னிபத் படையில் சேர்ந்தால்தான் தேசப்பற்றா? :  சீமான் கேள்வி | Eeman Questions Agnipath Scheme

குடிமக்களின் தலைவர் ஜனாதிபதி. மக்களாட்சியின் தலைவரே மக்கள் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்வர்களால் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் அமைப்பை மாற்றுங்கள். எல்லோரும் எதிர்க்கும் அக்னிபத் திட்டத்தை ஆளுநர் ஆதரிக்கின்றார் அமித்ஷா ஆதரிக்கின்றார். 

இந்த படையில் சேர்ந்தால் தேசபற்று வரும் என்கின்றனர். இப்படையில் சேர்ந்தால் தான் தேசபற்றா" என சீமான் கேள்வி எழுப்பினார்.       

பற்றி எரியும் வட மாநிலங்கள் .. கலவரமாகிறதா அக்னிபாத் திட்டம்? : பின்னணி என்ன ?