இறந்த உடல்களுடன் உறவு; அகோரி இறந்த பிறகு அவரின் உடலை என்ன செய்வாங்க தெரியுமா?
அகோரி சாதுக்கள் குறித்து பலரும் அறியாத தகவலை தெரிந்துக்கொள்வோம்.
அகோரி சாதுக்கள்
உத்தரபிரதேசம், பிரயாக்ராஜில் ஆன்மீக விழாவான மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரமாண்டமான மகா கும்பமேளாவுக்கு
உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்களும், துறவிகளும் வருகை தந்துள்ளனர். இதில் கலந்துக்கொண்ட அகோரி சாதுக்களின் உடை, வாழ்க்கை முறை முற்றிலும் வேறுபட்டுள்ளது.
அகோரி சாதுக்கள் சிவபெருமானை வணங்குபவர்கள். அவர்கள் இந்து மதத்தின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை நம்புவதில்லை. இவர்கள் இறந்த உடல்களில் அமர்ந்து தியானம் செய்வார்கள். இறந்த உடல்களுடன் உடல் உறவு கொள்வார்கள்.
மரணம் குறித்த பார்வை
இது சிவன் மற்றும் சக்தியை வழிபடுவதற்கான ஒரு வழி. சக்தியை அதிகரிக்கிறது என்று கூறுகின்றனர். அகோரிகளின் சடங்குகளில் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று மரணத்தை கையாளும் விதம்.
இறந்தவுடன், அகோரியின் உடல் தலைகீழாக வைக்கப்பட்டு, தலை கீழ்நோக்கியும், கால்கள் மேல்நோக்கியும் வைக்கப்படும். சடலம் 40 நாட்களுக்கு இதே நிலையில் விடப்படுகிறது, இது இயற்கை அதன் செயல்பாட்டை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இந்த காலக்கட்டத்திற்குப் பிறகு, உடல் மீண்டும் எடுக்கப்பட்டு, அதன் பாதி புனித கங்கையில் மூழ்கடிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தலை ஆன்மீக நடைமுறைகளுக்காக பாதுகாக்கப்படுகிறது. இதன்மூலம், ஆன்மா உடலிலிருந்து பிரிந்து, வாழ்க்கை மற்றும் மரணத்தின் நித்திய சுழற்சியை ஏற்றுக்கொள்வதைக் குறிப்பதாக கருதப்படுகிறது.