இனி திருப்பதியில் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் - முக்கிய அறிவிப்பு!
TTD நிர்வாகம் தரிசனம் குறித்த முக்கிய தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பதி தரிசனம்
திருமலைக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் பக்தர்கள் குவிந்து வருவது வழக்கம். இங்கு சுவாமி தரிசனத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை இருந்தாலும்,
ஐந்தே நிமிடங்களில் அனைத்து தரிசன டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடும். இதற்கிடையில் முன்பதிவு செய்யாமல் வருபவர்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண திருப்பதி கோயில் நிர்வாக வாரியம் அட்வான்ஸ்ட் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும் என்றும், விரைவில் இது அமல்படுத்தப்பட்டு ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் கிடைக்கும் என்றும் TTD தெரிவித்துள்ளது.
AI தொழில்நுட்பம்
இந்த AI தொழில்நுட்பம் ஆறு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும். இத்திட்டம் அமலுக்கு வந்தால், சாதாரண பக்தர்கள் கூட, திருப்பதியில் 1 மணி நேரத்தில் திம்மப்பனை தரிசனம் செய்யலாம். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், போலி டிக்கெட்டுகளைத் தடுக்க முடியும்.
இத்திட்டத்தின் மூலம் பக்தர்களைப் பிரிக்கும் தற்போதைய முறை நீக்கப்படும். AI தொழில்நுட்பத்தின் மூலம் ஃபேஸ் ரெகக்னிஷன் முறையை அறிமுகப்படுத்துகிறோம்.
ரயில் நிலையம், பேருந்து நிலையம், அலிபிரி உள்ளிட்ட முக்கிய 20 இடங்களில் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு தரிசனத்துக்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்படும். ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் வரிசையில் நின்று, அடுத்த ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்து விடலாம் என பி.ஆர். நாயுடு கூறியுள்ளார்.