GPS-ஐ நம்பி பாலைவன பயணம் - போன் சுவிட்ச்ஆப் ஆனதால் உயிரிழப்பு

Saudi Arabia
By Karthikraja Aug 25, 2024 05:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

GPS-ஐ நம்பி பாலைவனம் சென்ற நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரப் அல் காலி பாலைவனம்

தெலங்கனா மாநிலம் ஹைதராபாத்தின் கரீம் நகரை சேர்ந்த முகமது ஷெஹ்சாத் கான்(27), சவுதி அரேபியாவில் உள்ள பிரபல டெலிகாம் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.  

Mohammad Shehzad Khan

இந்நிலையில் தன்னுடன் பணியாற்றும் சூடான் நாட்டை சேர்ந்த ஒருவருடன் அங்குள்ள ரப் அல் காலி பாலைவனத்திற்குச் சென்றுள்ளார். உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பாலைவனம் சுமார் 650 கிலோ மீற்றர் பரப்பு கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஏமன் வரை நீண்டுள்ளது. 

Telegram நிறுவனர் அதிரடி கைது - என்ன காரணம்?

Telegram நிறுவனர் அதிரடி கைது - என்ன காரணம்?

உயிரிழப்பு

இந்நிலையில் நடு வழியில் இவர்களது ஜிபிஎஸ் சிக்னல் செயலிழந்து உள்ளது. இதனால் எப்படிச் செல்வது என தெரியாமல் குழப்பத்தில் இருந்த போது ஷெஹ்சாத்தின் மொபைலில் பேட்டரி தீர்ந்து போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலையில் எப்படியாவது பாலைவனத்தைத் தாண்டிவிடலாம் என நினைத்த அவர்கள் தொடர்ந்து வண்டியை ஓட்டியுள்ளனர்.

Rub al Khali desert

அப்போது எதிர்பாராத விதமாக வண்டியில் எரிபொருளும் தீர்ந்துள்ளது. இதனால் அவர்கள் பாலைவனத்திலேயே சிக்கியுள்ளனர். உணவும், தண்ணீரும் இல்லாமல் பாலைவனத்தில் சிக்கி தவித்தனர். வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், கடுமையான நீரிழப்பு மற்றும் சோர்வு காரணமாக இருவரும் பாலைவனத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து உடன் பணியாற்றுபவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து, காவல்துறை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 4 நாட்களுக்கு பிறகு அவர்களது உடல் அவர்களின் வாகனத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.