பின்லேடேனே வந்தாலும், அதிமுக முன் வச்ச கால பின் வைக்காது - ஜெயக்குமார் அதிரடி
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
விக்கிரவாண்டி இடை தேர்தல்
அதிமுக தேர்தலை புறக்கணித்தது பற்றி, விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் டெபாசிட் இழக்கும் என்ற சூழ்நிலை இருப்பதால் தான் போட்டியிடவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்து இருந்தார். அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
பொதுமக்களை பட்டியில் அடைத்தது போன்று அடைத்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலையை செய்தது திமுக. தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தலை நடத்தினால் நாங்கள் போட்டியிட தயார். தேர்தல் ஆணையத்தால் தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என உறுதியளிக்க முடியுமா?. அதனால் தான் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்.
என்னுடைய Entry துவங்கிவிட்டது ...தானும் கெட்டு கட்சியையும் கெடுக்கக்கூடாது !! தொண்டர்களை குஷியாக்கிய சசிகலா
அதிமுக
அதிமுக எப்போதும் புறமுதுகு காட்டுவதில்லை. அதிமுகவுக்கு எப்போதும் வெற்றி தான். பணபலம், ஆட்பலம், அதிகார துஷ்பிரயோகத்தைப் பிரயோகப்படுத்துவார்கள். அதனால் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது அதிமுகவுக்கு சக்தி, காலம், பணம் அனைத்தும் வீண். இந்தத் தேர்தலில் திமுகவின் அநியாயம், அக்கிரமம், அராஜகம் அனைத்தும் அரங்கேறும். அதனால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்தோம்.
கட்சி நிர்வாகிகள் கூடி எடுத்த முடிவை, இரட்டை இலைக்கு காலம் காலமாக வாக்களித்த தொண்டர்களும், பொதுமக்களும் எடுப்பார்கள். அவர்களின் கை வேறு சின்னத்துக்கு வாக்களிக்காது. அவர்களும் தேர்தலை புறக்கணிப்பாளர்கள்.
ஆலந்தூர் கண்டோன்மென்ட் தேர்தல் வாக்குப்பதிவில் அதிமுக முறைகேடு செய்ததாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அந்த தேர்தலை மத்திய அரசு நடத்தியது. அதில் அதிமுக எப்படி தலையிட முடியும்?. கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 150 வார்டுகளில், 86 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அந்தளவுக்கு திமுக அராஜகத்தை நடத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா
மேலும், “சசிகலாவும், அவரது குடும்பமும் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்கள். சசிகலாவை மட்டும் தான் ஜெயலலிதா திரும்ப சேர்த்துக் கொண்டார். அவர் கட்சியிலேயே இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத சசிகலாவை பொதுமக்கள் எப்படி ஏற்பார்கள். எக்சிட் ஆனவரால் என்ட்ரி கொடுக்க முடியாது.
ஓபிஎஸ் அரசியலில் ஒரு குறுநாவல். தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் ஏறவே ஏறாது. 2026, 31, 36, 42 எத்தனை தேர்தல்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒருபோதும் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணாமலை வந்தபிறகு சமூகவிரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவிட்டதை தமிழிசை தெளிவுபடுத்தி உள்ளார். தமிழிசை பேசியது தவறு என்றால், டெல்லிக்கு அழைத்து கண்டித்திருக்கலாம். மேடையில் அவமானப்படுத்தியிருக்கக் கூடாது. அண்ணாமலையை மாற்றிவிட்டு பின்லேடனை நியமித்தாலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. அதிமுக முன் வச்ச கால பின் வைக்காது என தெரிவித்துள்ளார்.