என்னுடைய Entry துவங்கிவிட்டது ...தானும் கெட்டு கட்சியையும் கெடுக்கக்கூடாது !! தொண்டர்களை குஷியாக்கிய சசிகலா
சென்னை போயஸ் கார்டனில் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியது வருமாறு,
சசிகலா பேச்சு
இந்தியாவிலேயே 3-வது பெரிய பெரிய இயக்கமாக அதிமுங்க உருவானது.,ஆனால் இன்றைக்கு தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. காரணம், ஒரு சில சுயநல வாதிகள் இயக்கத்தை இந்த அளவிற்கு எடுத்து சென்றுள்ளனர். இது எல்லாவற்றையும் நானும் பொறுமையாக பார்த்து கொண்டிருந்தேன்.
புரட்சி தலைவர் பொறுமையுடன் அனைவரையும் அனுசரித்து கட்சியை உருவாக்கினார். அவர் உடல் நலம் நலிவடைந்து அமெரிக்கா சென்று திரும்பிய போது நான் பேசியுள்ளேன். கட்சியின் மீது எனக்கு அக்கறை இருப்பதை கண்டு அவர் பல விஷயங்களை என்னிடம் பேசினார். அவர், யாரையும் தூக்கி போட்டு விட கூடாது என்பவர்.
நான் அப்போது கவனித்தேன். அம்மா அப்போது கொள்கை பரப்பு செயலாளர். அப்போது ஆர்.எம்.வீரப்பன் மற்றும் சோமசுந்தரம் இருவருமே அம்மாவிற்கு பல தொந்தரவுகளை அளித்தார்கள். அப்போது அம்மாவுடன் இருந்தது யாரு...நான் தான். அப்போதெல்லாம் தலைவர் என்னிடம் பேசுவார். அவருக்கு அடுத்து கட்சியை யார் வழிநடத்துவர் என்பது அவருக்கு தெரியும்.
அதிமுகவில் ஜாதி
அதே சமயம் எல்லாரையும் கொஞ்சம் விட்டு கொடுத்து இணக்கமாக கொண்டு சொல்லணும் என கூறுவார். அம்மாவிடமும் இதனை சொல்லுவேன். நானும் அப்படியே பழக்கப்பட்டு வந்துவிட்டேன். எனக்கு இந்த ஜாதி என யாரும் இல்லை. தலைவர் அப்படி தான். அம்மாவும் அப்படி தான்.நானும் அப்படி தான். அதுவும் நம்ப இயக்கத்துல ரெண்டு விஷயம் கிடையாது.
திமுக'ல அதிகம். ஒன்னு வாரிசு அரசியல். சாதாரண ஏழை கூட எம்.எல்.ஏ நம்ப இயக்கத்து'ல. தலைவர் அப்படி வெச்சிக்கல. அந்த முறையில் நான் வந்துவிட்டேன். இப்போ நம்ப இயக்கத்துல ஒரு குறிப்பிட்ட ஜாதி'னு ஜாதி அரசியல்க்குள்ள போறாங்க.
நிறைய ஜாதி அமைப்புகள் வெச்சி நடத்துறாங்க. அங்க போலாமே. ஆனா இங்க அப்படி செய்யுறத யாரும் பொறுத்துக்க மாட்டாங்க. நானும் பொறுத்துக்க மாட்டேன். தொண்டர்களும் பொறுத்துக்க மாட்டாங்க. அப்படி நினைத்திருந்த பெங்களூரு போகும் போது, ஏன் இவருக்கு முதல்வர் பதவி கொடுத்து போறேன்.
தானும் கெட்டு...
நான் ஜாதி பாக்க'ல. மேற்கு மாவட்டத்தில் இருந்து நிறைய ஆதரவு இருந்தது. அதனால கொடுத்தேன். இன்னைக்கு நிலைமை என்ன. அதிமுக 3ம்,4-வது இடத்திற்கு போய்டுச்சு. டெபாசிட் போய்டுச்சு. யாரு காரணம். எப்போதும் நம்ப கட்சி மேல பொதுமக்களுக்கு ஒரு இணக்கம் இருக்கு.
தானும் கேட்டு. கட்சியையும் கெடுக்கக்கூடாது. நிறைய பாத்தேன். நல்ல நேரம் வந்திருக்கு. இவளோ நாள் சொன்னது வேற, நம்ப நேரம் சரியா கனிஞ்சு வந்திருக்கு. எத பத்தியும் கவலை படாதீங்க. நான் சொன்னதுக்கு இது தான் நேரம். நிச்சயமாக தமிழ்நாட்டுல நம்பப்பக்கம் தான் இருக்காங்க.
நான் ஒரு strong'எ இருக்கேன். எந்த காலத்துலயும் அதிமுக முடிஞ்சு போச்சு'னு நினைக்க கூடாது. என்ன'னா என்னோட entry ஆரம்பிச்சிருக்கு. 2026'இல் முக்கியமா அம்மாவுடைய ஆட்சி தமிழ்நாட்டுல அமைப்போம். தனிப்பெரும் கட்சியாக அமைப்போம். நான் ரொம்ப பேச மாட்டேன். முக்கியமான நேரத்துல தான் பேசுவேன்.
Entry
விரைவில் சுற்றுப்பயணம் வர போறேன். பட்டி தொட்டிஎல்லாம் பொய் மக்கள் கிட்ட கேக்க போறேன். அப்போ திமுக சரியாக பதில் சொல்லணும். எனக்கு ஆட்சி முறை எல்லாம் தெரியும். திமுகவுடைய கோரப்பிடியில் இருந்து தமிழ்நாட்டை காப்பாத்த நம்ப வந்தே ஆகணும்.
ஒரு கண்ணு எனக்கு தொண்டர்கள். இன்னொன்னு தமிழ்நாட்டு மக்கள். என்னுடைய பார்வ நேர் பார்வ. அம்மா விட்டு சென்ற போது செய்யவேண்டிய சில விஷயங்களை செய்யணும். மக்களுக்காக 40 வருடங்கள் போய்டுச்சு. இன்னம் அப்படி தான்.என்னுடைய Entry துவங்கிவிட்டது. 2026'ல் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி.