தேர்தல் புறக்கணிப்பா..முடிஞ்சா இத பண்ணுங்க இபிஎஸ்? சவால் விடுத்த ஆர்.எஸ்.பாரதி!!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இருந்து அதிமுக போட்டியிடவில்லை என்பதை அறிவித்துள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஆர்.எஸ்.பாரதி சவால்
இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிசாமிக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மட்டும் தான் கலவரங்கள் நடைபெறவில்லை.
பல இடங்களில் அதிமுகவிற்கு டெபாசிட் போனது. இந்நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புறக்கணிப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்.
அவருக்கு நான் ஒரு சவால் விடுகிறேன்....இந்த தேர்தலில் அதிமுகவின் ஒன்றிய செயலாளர், கிளை கழக செயலாளர், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் யாரும் வாக்களிக்கக்கூடாது. அப்படியில்லாமல் அவர்கள் வாக்களித்தால் அவர்கள் அனைவருமே எடப்பாடி பழனிசாமியை புறக்கணிப்பதாக அர்த்தம்.
தேர்தல் விலகல்
இல்லையென்றால், வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து விலக்கவேண்டும். இப்படி அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? என சவால் விடுத்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதிலளிப்பார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
அதே நேரத்தில் தேர்தலில் புறக்கணிப்பதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற காரணத்தால் புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.