விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக எடுத்த அதிரடி

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami Election
By Karthikraja Jun 15, 2024 11:30 AM GMT
Report

முடிவு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

vikrvandi by election

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஜூன் 14 தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்க்கான கடைசி நாள் ஜூன் 21ம் தேதி என்றும், இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சி

அதிமுக புறக்கணிப்பு

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் "சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற அராஜக விடியா திமுக ஆட்சியில் 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை கழகம் புறக்கணிக்கிறது ! " என்று தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன், பாமக சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.