விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சி

Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Karthikraja Jun 14, 2024 05:58 AM GMT
Report


விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

vikravandi by election

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஜூன் 14 தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்க்கான கடைசி நாள் ஜூன் 21ம் தேதி என்றும், இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 நடைபெறும் என்று அறிவித்துள்ளது.  

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சீமானுக்கு என்ன சின்னம் - பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சீமானுக்கு என்ன சின்னம் - பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி

நாம் தமிழர்

தற்போது அங்கு நாம் தமிழர் சார்பில் வேட்பாளராக மருத்துவர் அபிநயா பொன்னிவளவனை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் .

abinaya naam tamilar vikravandi

இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் நாம தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் 65,381 வாக்குகள் பெற்று 4 ம் இடத்தை பெற்றார்.