விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சீமானுக்கு என்ன சின்னம் - பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி

Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Karthikraja Jun 11, 2024 07:56 AM GMT
Report

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சீமானுக்கு என்ன சின்னம் ஒதுக்கப்படும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

pugalendhi

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு "CISF பாதுகாப்பு வீரர்கள் தேர்தல் பணிக்கு வருவார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்திய இயந்திரம் இதற்கு பயன்படுத்தப்படாது. 

மேலும், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் இருக்காது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை தொடரலாம். பணம் கொண்டு செல்வதற்கான வரம்பு 50,000 ரூபாய் மட்டுமே. நாடாளுமன்ற தேர்தலில் இருந்ததைப்போல கட்டுப்பாடுகள் தொடரும் என்றார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!

நாம் தமிழர் சின்னம்

மேலும் அவரிடம் நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

satyabrata sahoo

அதற்கு, "விசிக, நாம் தமிழர் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டதை தலைமைத் தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். அதன் பின்னரே இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்குவது பற்றி முடிவெடுக்கப்படும்” " என தெரிவித்தார்.

மாநில அங்கீகாரம்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் மைக் சின்னத்தில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில கூட வெல்லவில்லை. ஆனால் 8.9% வாக்குகளை பெற்றுள்ளது.

மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெற 8% வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில் தற்பொழுது நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிக்கான அங்கீகாரம் அளிக்கப்படும் என்றே தெரிகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

அது போல் இந்தியா கூட்டணியில் இணைந்து 2 தொகுதிதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும் வென்றுள்ளது.

thol thirumavalavan

மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற, நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெல்ல வேண்டும் அல்லது, மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுகளில் 8% வாக்குகளை பெற வேண்டும். அந்த வகையில், 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் விசிகவுக்கு மாநில அங்கீகாரம் கிடைக்க உள்ளது.