விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்து உள்ளது தேர்தல் ஆணையம்
புகழேந்தி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவார்.
கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மரணமடைந்தார்.
விக்கிரவாண்டி தொகுதி
எம்எல்ஏ புகழேந்தி மரணம் குறித்து சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது.
அதன்பின், இந்திய நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
தேர்தல் தேதி
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனுவை திரும்ப பெறுவதற்க்கான கடைசி நாள் ஜூன் 21ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இனி இந்த தொகுதிக்கு புதிதாக திட்டங்கள் எதுவும் அறிவிக்க முடியாது. மேலும் நாடு முழுவதும் காலியாகவுள்ள 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.