தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்எல்ஏ திடீர் மரணம் - தொண்டர்கள் அதிர்ச்சி!

DMK Death
By Swetha Apr 06, 2024 06:45 AM GMT
Report

விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.

திமுக எம்எல்ஏ

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் தீவிரமடைந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்எல்ஏ திடீர் மரணம் - தொண்டர்கள் அதிர்ச்சி! | Rest In Peace Vikravandi Mla Pugalendi

அந்த வகையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரான துரை.ரவிக்குமாருக்கு ஆதரவாக திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், விக்கிரவாண்டி மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினர் புகழேந்தியும் தீவிர வாக்குசேகரிப்பில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார்.

அதில், நேற்று நடைபெற்ற பிரசாரத்தில் கலந்து கொண்ட புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் மரணம் - தலைவர்கள் இரங்கல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் மரணம் - தலைவர்கள் இரங்கல்!

திடீர் மரணம்

உடனடியாக உடன் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்எல்ஏ திடீர் மரணம் - தொண்டர்கள் அதிர்ச்சி! | Rest In Peace Vikravandi Mla Pugalendi

இதற்கிடையில் சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளிக்க வரவழைத்தனர். திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏற்கெனவே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புகழேந்தி உயிரிழந்தார். எம்எல்ஏவின் திடீர் மறைவு, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது