விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் மரணம் - தலைவர்கள் இரங்கல்!
விசிக கட்சியின் முதன்மை செயலாளர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதன்மை செயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் நேற்று மரணம் அடைந்தார். இவர் கடந்த 2-ம் தேதி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவரது இதயம் செயலிழந்தது காரணமாக நேற்று உயிரிழந்தார்.
அவரது உடல் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பிறகு சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது.
அறிக்கை
இந்நிலையில், திருமாவளவன் அறிக்கையில், "கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார். உஞ்சை அரசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், "மதவாத சக்திகளையும், சனாதன மூடப்பழக்க வழக்கங்களையும் எதிர்த்து போராடிய களப்பணியாளர் உஞ்சை அரசன்.
அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.