பட்டப்படிப்பு முடித்த இளைஞன் உணவு டெலிவரி செய்யும் அவலம் - ஜெயக்குமார் காட்டம்!

Tamil nadu ADMK D. Jayakumar
By Jiyath Jun 13, 2024 02:29 PM GMT
Report

அரசுப்பணியிடங்கள் நிரப்பபடும் என்ற ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.  

ஜெயக்குமார் 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற TNPSC குரூப்-4 தேர்வில் தேர்வர்களை வஞ்சித்துள்ளது இந்த விடியா திமுக அரசு. 6244 காலிப்பணியிடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருந்தனர்.

பட்டப்படிப்பு முடித்த இளைஞன் உணவு டெலிவரி செய்யும் அவலம் - ஜெயக்குமார் காட்டம்! | Admk Jayakumar Question To Mkstalin

பலர் நமக்கு பணி கிடைக்காது என பின்வாங்கி விட்டனர். இதில் இருந்தே வேலைவாய்ப்பு திண்டாட்டம்‌ எந்தளவு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. பல லட்சக்கணக்கில் பணியிடங்கள் இருக்கும் போது ஆயிரக்கணக்கில் தேர்வை நடத்துகிறது இந்த விடியா அரசு.

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை? டெல்லி வரை சென்ற தேமுதிக விஜயபிரபாகரன்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை? டெல்லி வரை சென்ற தேமுதிக விஜயபிரபாகரன்!

கேடுகெட்ட ஆட்சி

ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டிற்கு ஒரு லட்சம் அரசுப்பணியிடங்கள் நிரப்பபடும் என்ற ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு? பட்டபடிப்பு முடித்த இளைஞன் உணவு டெலிவரி செய்வதும் பைக் டாக்ஸி ஓட்டும் அவலமும்,

பட்டப்படிப்பு முடித்த இளைஞன் உணவு டெலிவரி செய்யும் அவலம் - ஜெயக்குமார் காட்டம்! | Admk Jayakumar Question To Mkstalin

இந்த கேடுகெட்ட ஆட்சியில் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்திற்கு என்ன பதில் வைத்துளார் இந்த நிர்வாக திறனற்ற முதல்வர் ஸ்டாலின்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.