திமுக தலைமையில் விளம்பர அரசு..இனி பொறுப்புடன் இருக்கவேண்டும்- சசிகலா கண்டனம்!

Bird Flu DMK V. K. Sasikala
By Swetha Jun 13, 2024 03:27 AM GMT
Report

இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2019-ம் ஆண்டு அரிதாக காணப்படும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

சசிகலா கண்டனம்

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ளவேண்டும் என சசிகலா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையில் விளம்பர அரசு..இனி பொறுப்புடன் இருக்கவேண்டும்- சசிகலா கண்டனம்! | Sasikalas Take On Bird Flu

இது குறித்து அவர் கூறுகையில், கேரளாவில் உள்ள ஆழப்புலா, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள நெல்லுார், மஹாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் ஜார்கண்டில் ராஞ்சி ஆகிய பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய், 'H5N1' பரவி வருவது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட, 4 மாநிலங்களில் கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மேலும், மேற்கு வங்காளத்தில் 4 வயது குழந்தை புதிய வகை H9N2 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்த தேவையான அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ளவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

சசிகலா காலில் தானே விழுந்தேன்.. ஒரே வரியில் காலி செய்த இபிஎஸ்!

சசிகலா காலில் தானே விழுந்தேன்.. ஒரே வரியில் காலி செய்த இபிஎஸ்!

 விளம்பர அரசு

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் இது போன்ற சுகாதார நடவடிக்கைகள் சிறப்பான முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. பறவை காய்ச்சல் நோய் கோழிகளையும், மனிதர்களையும் தாக்காமல் இருப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

திமுக தலைமையில் விளம்பர அரசு..இனி பொறுப்புடன் இருக்கவேண்டும்- சசிகலா கண்டனம்! | Sasikalas Take On Bird Flu

திமுக தலைமையிலான அரசு இதுபோன்று எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுகவினர் மக்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், தங்கள் கட்சியை எப்படி வளர்ப்பது, அடுத்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று வெறும் அரசியல் செய்வதை விட்டுவிட்டு,

தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்படவேண்டும். தமிழகத்தில் சுகாதார சீர்கேடுகள் ஆகாமல் தடுத்திட, புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் போன்று தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுத்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.