சசிகலா காலில் தானே விழுந்தேன்.. ஒரே வரியில் காலி செய்த இபிஎஸ்!

Udhayanidhi Stalin Madurai Edappadi K. Palaniswami
By Sumathi Mar 29, 2024 08:30 AM GMT
Report

சசிகலா காலில் விழுந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் தேர்தல் பணிமனை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

edappadi palanisamy - sasikala

இதில், அதிமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி,

அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது. அது அதிமுக அலையாக வீசுகிறது.

பொதுச்செயலாளர் பதவி; அதிகாரமேயில்லை, மல்லுக்கட்டும் சசிகலா - எடப்பாடி முடிவு என்ன?

பொதுச்செயலாளர் பதவி; அதிகாரமேயில்லை, மல்லுக்கட்டும் சசிகலா - எடப்பாடி முடிவு என்ன?

காலில் விழுந்தது ஏன்?

அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிமுகவை அவதூறாக பேசி வருகிறார்கள் என்றார்.

press meet

தொடர்ந்து சசிகலா காலில் விழுந்தது குறித்த கேள்விக்கு, ஏன் பெரியவர்கள் காலில் விழுவது தப்பா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக்கொடை பிடிக்கிறார்.

பிரதமர் இடத்தில் சரணாகதி அடைந்து விட்டு, வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை விடும் போடுகிறார்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.