விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை? டெல்லி வரை சென்ற தேமுதிக விஜயபிரபாகரன்!
டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் மனு அளித்துள்ளார்.
விஜயபிரபாகரன்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். அந்த தொகுதியில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது,
புகார் மனு
இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் மனு அளித்துள்ளார். விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை குளறுபடிகள் தொடர்பாக அவர் புகார் மனு அளித்துள்ளார்.