விருதுநகரில் விஜயபிரபாகரன் - களம் கேப்டன் மகனுக்கு சாதகமாக உள்ளதா..?
மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார் விஜயபிரபாகரன்.
விஜயபிரபாகரன்
மறைந்த தேமுதிக தலைவரின் மகன் விஜயபிரபாகரன் இன்று தேமுதிக அலுவலகத்தில் கட்சி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
விஜயகாந்தின் மறைவு அனுதாப ஓட்டுகளை மாறி தேமுதிகவிற்கு சாதகமாக அமையும் என்பதாலும், விஜய்காந்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதால் இந்த தொகுதியை தேமுதிக முடிவு செய்த்துள்ளது.
அதிமுக கூட்டணி இருக்கும் நிலையில், மேற்க்கூறிய காரணங்கள் தேமுதிகவிற்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் களம்கண்ட தேமுதிகவின் வேட்பாளர் அழகர் சாமி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூரிடம் தோல்வியடைந்தார்.
மாணிக்கம் தாகூர்
மாணிக்கம்தாகூர் 4,70,883 வாக்குகளை பெற்ற நிலையில், அழகர் சாமி 3,16,329 வாக்குகள் பெற்றார். இம்முறை திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக மீண்டும் மாணிக்கம் தாகூர் தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது உருவான விருதுநகர் தொகுதியில் 3 முறை மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு இரண்டு முறை(2009, 2019) ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
அதே நேரத்தில், அதிமுகவுடன் கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரனை களமிறக்கினால் உறுதியாக வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் அவரை வேட்பாளராக அறிவித்து போட்டியிடச் செய்ய வேண்டும் என மதுரை சிவகாசியில் நடந்த தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.