தேர்தல் முடிந்ததும் ஆட்டுக் குட்டி பிரியாணி ஆவது உறுதி - பிரபல நடிகை கலகல..
நடிகை விந்தியா பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார்.
நடிகை விந்தியா
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் கோவையில் பேசிய அவர், நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் என கத்துவது போல, நான்தான் தலைவன் நான்தான் தலைவன் என ஒரு ஆட்டுக்குட்டி சுத்திக்கொண்டு இருக்கிறது.
கட்சிய நீ வச்சிக்கோ.. விருதுநகர நான் வச்சிக்குறேன்; சரத்குமார் - பாஜக கூட்டணி.. நடிகை விந்தியா தாக்கு!
அதுதான் வரலாறு..
திருவிழா முடிந்ததும் ஆட்டை பலிகொடுப்பது வழக்கம். அந்த ஆட்டை வளர்த்தவன் பலிகொடுப்பன் என்பதுதான் வரலாறு. ஆட்டுக்குட்டி ஆயிரம் சிங்க வேஷம் போடலாம்.
ஆனா இந்த தேர்தல் முடிந்த பிறகு ஆட்டுக்குட்டி மட்டன் பிரியாணி ஆகப்போறது கன்பார்ம். தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தாமரை கிடையாது கருவேல மரம்தான்.
அது வளரவே கூடாது அடியோடு வெட்டி எறியணும் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.