திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - நடிகை விந்தியா விமர்சனம்

ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Mar 18, 2023 08:52 AM GMT
Report

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

நடிகை விந்தியா சாமி தரிசனம் 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் அஇஅதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், கடவுளை நம்பினால் எங்களை கைவிட மாட்டார் என்பது எங்களின் நம்பிக்கை நேற்று பழனிக்கு சென்று தரிசனம் செய்தேன் சாமியை வேண்டினதால் நேற்று அறிவித்தார்கள் பொதுச் செயலாளர் தேர்தல் அதிமுகவில் நடைபெறும் என்று இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.

law-and-order-meeting-laughs-in-dmk-rule-vindhya

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது குடும்ப கட்சி கிடையாது இது ஒரு மாபெரும் இயக்கம் ஒன்றை கோடி தொண்டர்கள் குடும்பமாக வாழ்கின்ற இயக்கத்திற்கு பொதுச் செயலாளராக எடப்பாடியார் அவர்கள் வருகிறார் என்றால் அவருடைய விசுவாசம், கடுமையான உழைப்பு, அவருடைய துணிச்சல், அவருடைய நேர்மை தான் காரணம்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

தமிழ்நாட்டு மக்களை திருட்டு திமுகவிலிருந்து காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைப்பவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவருக்கு துணையாக இருந்து அவரை வெற்றி பெற வைத்து மக்களை காக்க கூடியதற்க்கும், சீக்கிரம் அதிமுக ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று நான் ஆண்டளை வேண்டி தரிசனம் செய்து வந்துள்ளேன். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

இது மக்களுக்கு நன்றாகவே தெரியும் கோவில் வாசலில் இருந்து கோர்ட் வாசல் வரை கொலை,கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

சட்டம் ஒழுங்கு என்பது திமுக ஆட்சியில் நாம் எதிர்பார்க்க முடியாது. திமுக ஆட்சியில் அவர்கள் சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாட்டார்கள் மக்களுக்கான ஆட்சியை திமுக நடத்தாது அவர்களுக்கு ஆட்சி நடத்தவும் தெரியாது.

திமுகவினர் ஆட்சி நடத்துவது போல் காட்சி மட்டுமே நடத்துவார்கள் விளம்பரத்தை கொடுப்பார்கள் மக்களுக்காக எதுவுமே செய்யாத ஆட்சி தான் திமுக.

law-and-order-meeting-laughs-in-dmk-rule-vindhya

ஒரு செய்தி வந்தால் அதை திசை திருப்புவதற்காக வேறு ஒருபிரச்சினையை கிளப்புவது திமுக. பொய் வழக்கு போடுவது,வருமான வரி சோதனை நடத்துவது என்று மக்களை திசை திருப்புவார்கள்.

திமுகவை உன்னித்து கவனித்தால் ஏகப்பட்ட பிரச்சனைகள் அவர்களது கட்சிக்குள்ளே உள்ளது. திமுகவின் உட்கட்சி பிரச்சனை வெடிக்கப் போகிறதை நாம் வேடிக்கை பார்க்க போகிறோம்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக அண்ணாமலை கேள்விக்கு.. அதை அண்ணாமலை அவர்கள் முடிவெடுக்க முடியாது அவர்களது தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை கூட்டணி இருக்கிறது. தற்போது எந்த தேர்தலும் கிடையாது பெரிய தேர்தல் வரும்போது தலைவர்கள் உட்கார்ந்து கூட்டணி பற்றி முடிவு எடுப்பார்கள்.

ஓபிஎஸ் சசிகலாவை சந்தித்த கேள்விக்கு அவருக்கு நிறைய நேரங்கள் இருக்கிறது அவர் யாரை வேணாலும் சந்திப்பார். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று விந்தியா தெரிவித்தார்.