கட்சிய நீ வச்சிக்கோ.. விருதுநகர நான் வச்சிக்குறேன்; சரத்குமார் - பாஜக கூட்டணி.. நடிகை விந்தியா தாக்கு!
சரத்குமார் பாஜகவில் இணைந்தது குறித்து நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.
நடிகை விந்தியா
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் வகையில், சிவகங்கை திருப்புவனத்தில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து விந்தியா பேசினார். அப்போது, பாரதிய ஜனதா கட்சியில் சரத்குமார் சேர்ந்த டீலிங் தெரியுமா? சரத்குமார் கட்சியில சேரப் போகும்போது நோட்டு எவ்வளவு? சீட்டு எவ்வளவுன்னு அண்ணாமலைகிட்ட கேட்டிருக்காரு.
அண்ணாமலையோ உங்க கட்சி எவ்வளவுன்னு கேட்க, அந்த டீலிங் சரத்குமாருக்கு பிடிச்சுப்போய்விட்டது. உடனே, விருதுநகர நான் வச்சுக்கிறேன். என் கட்சிய நீங்க வச்சுக்கோங்கன்னு கொடுத்திட்டாரு. மறுநாள் மனைவி ராதிகா சரத்குமாரை அழைச்சுக்கிட்டு அண்ணாமலை வீட்டுக்குப் போயிருக்காரு சரத்குமார்.
சரத்குமார்-பாஜக
என்னங்க கட்சிய இணைச்சுட்டு ரெண்டு பேரு மட்டும் வந்திருக்கீங்கன்னு கேட்டாரு. நாங்க ரெண்டு பேரும் தான் கட்சின்னு சொன்னாராம் சரத்குமார். இவங்க எல்லாம் கூட பரவாயில்லை. எனக்கு ஒரு சீட்டு போதும் என்று சொன்ன டிடிவி தினகரனுக்கு ரெண்டு வச்சுக்கங்கன்னு 2 சீட் கொடுத்திருக்காங்க.
எப்படி இருந்த ஓபிஎஸ்? பாவம்.. பேச்சுவார்த்தை.. பேச்சுவார்த்தைன்னு போயி ஒரு சீட்ட வாங்கி அவரே நிக்கிறாரு
திமுகவிடம் 6 என காங்கிரஸ் எழுதி கொடுத்ததை திமுக தலைமை 9 என நினைத்து 9 சீட்டுகளை கொடுத்துவிட்டனர். ஆனால் போட்டியிட ஆள் இல்லாததால் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்திற்கே திரும்ப சீட் கொடுத்துவிட்டனர் என நக்கலாக விமர்சித்துள்ளார்.